தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக செய்துங்கநல்லூர் இளநிலை மின் பொறியாளர் அலுவலத்தில் வைத்து செய்துங்கநல்லூர் மின் நுகர்வோர் கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மின்சார மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் ராம்குமார், ஸ்ரீவைகுண்டம் உதவி செயற்பொறியாளர் உஷாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்துங்கநல்லூர் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர், கொங்கராயகுறிச்சி சமூக சேவகர் அப்துல் சலாம் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதன்பின் மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் சார்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கருங்குளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 32 கிராம மக்கள் பயன் பெறும் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் புதிய மின்மாற்றி அமைக்க ஏற்பாடு செய்து அந்த பணி கிடப்பில் கிடக்கிறது. அதை உடனடியாக செய்து தரவேண்டும் என்று மனுகொடுத்தார். அந்த மனுவை பரிசலித்த மேற்பார்வை பொறியாளர் உடனடியாக கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்துக்கு புதிய மின்மாற்றி அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தார்.
அவர் உறுதியளித்து 24 மணிநேரத்தில் கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் மின்மாற்றி அமைக்கும் பணி நடந்தது. இதற்காக மின் ஊழியர்கள் துரிதாமாக செயல்பாட்டர்கள். இந்த பணி வேமாக நடைபெற காரணமாக இருந்த மின் ஊழியர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், உதவி பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் மின் அலுவலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.


