தமிழ்நாடு அரசின் முன்னாள் சமூகநலத்துறை அமைச்சரும், தற்போதைய சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான மாண்புமிகு கீதாஜீவன் – ஜீவன் ஜேக்கப் ராஜேந்திரன் அவர்களுக்கு மணிவிழா தூத்துக்குடியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வணக்கம் ஸ்ரீவையில் பதிவிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் தூத்துக்குடியில் மே 06, 1970 அன்று பிறந்தார். இவர் தூத்துக்குடியில் ஆங்கிலவழிக் கல்வியளிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராக இருந்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். பெரியசாமியின் மகள் ஆவார். இவரது தாயார் பெயர் எபநேசர். இவர் இதற்கு முன்பாக 1996 முதல் 2001 வரை உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வுச் செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார். 2006 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டு தமிழக சட்டமன்றத்தில் இடம்பெற்றார். பின்னர் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், திமுக கட்சியின் சார்பாக தூத்துக்குடி தொகுதியிலிருந்து, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சசராக பதவியேற்றார். இவருக்கு மகிழ்ஜான் சந்தோஷ், ஜீனா எபி சுந்தரி ஆகிய குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடி நகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இவரது சகோதரர் ஆவார்.


