எழுத்தாளர் கோமதி சங்கர் நீலகண்ட பிரம்மச்சாரி என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலில் எழுத்தாளர் நாடக வடிவில் ஒரு புரட்சிக்காரரின் வரலாற்று துளிகள் என்ற தலைப்பில் இந்த நூலை சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலை எழுத்தாளர் கோமதி சங்கர் செய்துங்கநல்லூரில் வைத்து அறிமுகம் செய்ய, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் கோமதிசங்கர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இந்த நூல்வேண்டுவோர் சுவடு பதிப்பகம் எண் 9551065500, 9791916936 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதன் விலை 150 ரூபாய் ஆகும்.
செய்துங்கநல்லூரில்
வாக்காளர் பட்டியல் முறை
விழிப்புணர்வு பேரணி
செய்துங்கநல்லூர் கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 மற்றும் புதிய வாக்காளர் சேர்த்தல் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கலலூரி மாணவர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணிக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் செல்வக்குமார் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் காசிராஜன் முன்னிலை விகித்தார். பேரணி கால்நடை ஆஸ்பத்திரி முன்பு துவங்கி போலீஸ் ஸ்டேஷன் வரை நடந்தது ஸ்ரீவைகுண்டம் தேர்தல் துணை வட்டாட்சியர் அய்யனார், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட ஆசிரியர் ஆறுமுக சேகர், கிராம நிர்வாக அதிகாரி சிவகுருநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேரணியின் போது பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்பு தொடர்பாக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.


