தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இடையூறாக உள்ள மின்விளக்கு தூண்களை மாற்றி அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மணிநகர் பகுதியில் நடைபெற்ற புதிய தார் சாலை பணிகள், ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முதல் இசக்கியம்மன் கோயில் வரை போக்குவரத்திற்கும் வாகனம் நிறுத்துவதற்கும் இடையூறாக உள்ள மின்விளக்கு தூண்களை மாற்றி அமைக்கும் விதமாக மின் வாரிய அதிகாரிகளுடன் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு பணிகளை வரும் நாட்களில் விரைந்து துவங்குமாறு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், வட்டச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


