தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் ஓடை உள்ளிட்ட பணிகளை ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் சமையல் கூடம் மற்றும் தூர்வாரப்பட்ட பண்டாரம்பட்டி, முள்ளிக்குளம், சி.வ.குளம் ஆகிய குளங்களை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, இன்று (31.10.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் 18 மாநகராட்சி பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் சமையல் கூடத்தினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர், அரிசி, பருப்பு, எண்ணெய் உணவுப்பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
மேலும், அங்கு குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் உணவினை சாப்பிட்டு உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து கனேஷ்நகர் பகுதியில் அமைந்துள்ள நுண் உரம் செயலாக்க மையத்தில் உரம் தயாரிப்பதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வடகிழக்கு பருவமழையின்போது தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வெள்ள நீர் புகுவதை தடுக்கும் வகையில் காலாங்கரையில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் ஓடையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் உள்ள தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ள பண்டாரம்பட்டி, முள்ளிக்குளம், சி.வ.குளம் ஆகிய குளங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், உடனிருந்தார்.


