கிருஷ்ணாபுரம் காந்தவியல் இந்திய பூவி காந்த நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தில் உள்ள பூமத்திய பூவியியற்பியல் ஆய்வு நிலையத்தில் தேசிய அறிவியல் தினம் நடந்தது.
ஆராய்ச்சி நிலைய தலைவர் டாக்டர் அணில் குமார் தலைமை வகித்தார். ஆராய்ச்சியாளர் சிவா வரவேற்றார். முன்னாள் புவி தொழில் நுட்ப துறை தலைவர் டாக்டர் சந்திரசேகர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். திருவனந்தபுரம் பல்கலைகழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் பிரின்ஸ் சிறப்புரையாற்றினார். பாளையங்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு அறிவியல் தலைப்புகளில் மாணவர்கள் தங்கள் திறனை வெளிபடுத்தினர். இதில் முதல் பரிசை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர் இமானுவல் ª பற்றார். அதே கல்லூரி மற்றும் துறையை சேர்ந்த அஜீத் இரண்டாம் பரிசை பெற்றார். மூன்றாம் பரிசை சாரதா கல்லூரி இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் விஜயஸ்ரீ, ராஜ லெட்சுமி ஆகியோர் இணைந்து பெற்றனர்.
நிகழ்ச்சியை தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர் இளங்கோ ஒருங்கிணைத்திருந்தார்.


