பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறை நடத்திய உமறுப்புலவர் பிறந்த நாள் மற்றும் பொன் விழாக் கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் சே..மு.அப்துல் காதர் பேச்சு.
உமறுப்புலவர் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக நடத்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாகக் கல்லூரியின் பொன்விழா சிறப்புக் கருத்தரங்கமாக பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை சார்பில் 30.10.2023 திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு உமறுப் புலவரின் புலமை நயம் எனும் பொருளில் உமறுப் புலவர் பிறந்த நாள் விழாக் கருத்தரங்கம் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு. அப்துல் காதர் தலைமையுரை ஆற்றியபோது, இஸ்லாமியக் காப்பிய முன்னோடியாகத் திகழ்ந்தவர் உமறுப் புலவர்” என்று குறிப்பிட்டார். கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ச. மகாதேவன் தமது அறிமுகவுரையில் ” பாரதிக்கு முன்பாக எட்டயபுர மண்ணில் தமிழ்க் கவிதை மரபை ஏற்படுத்தியவர் உமறுப் புலவர் ‘ என்று பேசினார். கல்லூரித் துணை முதல்வர் முனைவர் ச.மு.அ. செய்யது முகம்மது காஜா வாழ்த்திப் பேசினார். உமறுப் புலவரின் உவமை நயம் எனும் தலைப்பில் பேராசிரியர்கள் மு. சாதிக் அலி, மு. அபுல் ஹசன் ஆகியோரும், சீறாப் புராண வர்ணனைகள் எனும் தலைப்பில் முனைவர் இரா. அனுசுயா, முனைவர் வ. மாலிக், உமறுப்புலவரும் மாஞானி சதக்கத்துல்லாஹ் அப்பாவும் எனும் தலைப்பில் முனைவர் செ.ஆமினா பானு, முனைவர் செ. பாத்திமா ஆகியோர் ஆய்வுரையாற்றினர். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் அ.சே. சேக் சிந்தா நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் துறை செய்திருந்தது.


