தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பதஞ்சலி வியாக்கரபாதீஸ்வரர் திருக்கோவிலில் வருடம் தோறும் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த வருடத்திற்கான அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனை அர்ச்சகர் முத்துராமன் பூஜை செய்தார். கோயில் அறங்காவலர் குரு மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


