தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம்வளர்த்த அம்பிகை சமேத காஞ்சி விஜய கச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோயிலில் ஐப்பசித் திருக் கல்யாண திருவிழாவை முன்னிட்டு இன்று 28..10.2023 சனிக் கிழமை காலை 5..00 மணி அளவில் கொடியேற்றம் நடை பெற்றது.
இன்று மாலை அப்பர் உழவாரப் பணி வீதி உலாவுடன் ஆரம்பிக்கப் பட்டு தினமும் காலையிலும் மாலையிலும் வாகனங்களில் அம்பாள் வீதி உலா நடை பெறும்.
6..11.2023 திங்கட்கிழமை 10ம் திருவிழா அன்று மாணிக்கவாசகர் பாடலுடன் திருப்பொற்சுண்ணம் இடிக்கப் பெற்று, இரவு அம்பாள் பல்லக்கில் வீதி உலா நடை பெற்று பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும்.
7.11.23 செவ்வாய்க்கிழமை மாலை சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண காப்பு கட்டப்படும்.
8..11.23 புதன்கிழமை காலை அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் பட்டு, மாலையில் அம்பாளும் சுவாமியும் காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றப்படும்.
9..11.23 வியாழக் கிழமை காலை 4.00 மணிக்கு மேல் 5..00 மணிக்குள் உத்திர நட்சத்திரத்தில் திருக்கல்யாணம் நடைபெற்று திருமாங்கல்யதாரணம் அணிவிக்கப் படும்.
தொடர்ந்து பல்லக்கில் சுவாமியும் அம்பாளும் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் நடைபெற்று அன்னதானம் வழங்கப் படுகிறது
தொடர்ந்து மூன்று நாட்கள் சுவாமியும் அம்பாளும் ஊஞ்சல் காட்சி நடை பெறுகிறது.
பின் 12..11.23 ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டுடன்
திருக்கல்யாண திருவிழா நிறைவு பெறுகிறது.


