மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளார் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர், ஆன்மிக குரு பங்காரு அடிகளார் கடந்த 19ம் தேதி முக்தி அடைந்தார். அவர் ஜீவ சமாதி அடைந்துள்ள புற்று மண்டபத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று மேல்மருவத்தூர் சென்று வழிபட்டார்.
பங்காரு அடிகளர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வழிபட்டார். பின்னர் பங்காரு அடிகளாரின் துணைவியாரும், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவருமான லட்சுமி பங்காரு அடிகளாரை சந்தித்து நலம் விசாரித்தார். அருள்திரு அடிகளார் அவர்களின் மூத்த மகன் கோ.ப.அன்பழகன், இளைய மகன் கோ.ப.செந்தில்குமார், மகள்கள் ஸ்ரீதேவி, உமா ஆகியோர் உடன் இருந்தனர்.


