தூத்துக்குடி தென்காசி மாவட்ட அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் திருப்பணி சம்மந்தமான மண்டல வல்லுநர் குழு கூட்டம், தூத்துக்குடி அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. இணை ஆணையர் ம.அன்புமணி தலைமை வகித்தார். 44 கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழக்கு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள முத்தாலங்குறிச்சி வீரபாண்டிஸ்வரர் கோயில், ராம விநாயகர் கோயில், லெட்சுமி நரசிம்மர் கோயில் ஆகிய கோயில்கள் மிகவும் சிதலமடைந்து உள்ளது. இந்த கோயிலை திரும்ப கட்ட மண்டல வல்லுனர் குழுவினர் அனுமதி அளித்தனர். இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மண்டல செயற்பொறியாளர் ஆறுமுகம், தூத்துக்குடி மண்டல ஸ்தபதி பார்த்திபன், தூத்துக்குடி மண்டல உதவி பொறியாளர் சத்யன் ஆசாரி, தூத்துக்குடி மாவட்ட உதவி பொறியாளர் ரங்கசாமி, சைவ ஆகம கல்யாணசுந்தரம் பட்டர், ஸ்ரீவைகுண்டம் ஆய்வர் நம்பி, அறங்காவலர் காமராசு, வள்ளி, சுடலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முத்தாலங்குறிச்சி கோயில்களில் திருப்பணி செய்யும் வேலைகளை ஆய்வு செய்து அனுமதிக்கு சென்னை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தூத்துக்குடி மாவட்ட வரலாறு நூல் இணை ஆணையர் அன்புமணிக்கு வழங்கப்பட்டது


