தூத்துக்குடியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான மேஜைப்பந்து போட்டியில் தூய மரியன்னை கல்லூரி அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான மகளிர் மேஜைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் 19 கல்லூரிகள் பங்கேற்றன. இதில், தூத்துக்குடி தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரி முதலிடம் பெற்றது.
மேலும் அணியில் இடம் பிடித்திருந்த மாணவிகள் சு.மகாலெட்சுமி, மு. நிகி கொன்சகா, ஐ. ஜாப்ரினா ஆகியோர் பல்கலைக்கழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்றுனர் பர்னபாஸ், உடற்கல்வி இயக்குனர் கிறிஸ்டி ஹேமா ஆகியோரை கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி ஜெஸி, பெர்னான்டோ மற்றும் செயலர் அருட்சகோதரி சிபானா ஆகியோர் பாராட்டினர்.


