விளாத்திகுளம் பகுதியில் வருகிற 28ம் தேதி கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்க உள்ளனர்.
இது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான கீதா ஜீவன் ஆகியோர் வருகிற 28ம் தேதி (சனிக்கிழமை) விளாத்திகுளம் மேற்கு பகுதியில் மக்கள் களம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
இதன்படி மாலை 4 மணிக்கு சிவஞானபுரம், மாலை 5 மணிக்கு பொம்மையாபுரம், சக்கம்மாள்புரம் ஊராட்சி, மாலை 6 மணிக்கு நமச்சிவாயபுரம், இரவு 7 மணிக்கு அருங்குளம், 8 மணிக்கு வெள்ளையம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


