தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ரவுண்டானாக்களில் வண்ண விளக்கும் நீரூற்றும் அமைக்க உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை தூய்மையாகவும் மாசில்லா மாநகரமாகவும் மாற்றுவது மட்டுமல்லாமல் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக ஏற்கனவே ஜெயராஜ் ரோடு மற்றும் நான்காம் கேட்டில் இருந்து செல்லும் பாதையில் அமைக்கப்பட்டு உள்ளது.
அதுபோல் தற்பொழுது கருப்பட்டி சொசைட்டி அருகே உள்ள பூங்கவிலும், சுகம் ஹோட்டல் அருகில் உள்ள ரவுண்டானாவிலும் வண்ண விளக்கும் நீரூற்றும் அமைக்க முடிவு செய்து பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது. மேலும் இது போல் அண்ணா சிலை பின்புறம், கலைஞர் அரங்கம் அருகில், மில்லர்புரம் மற்றும் எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு ரவுண்டானா, ஆகிய பகுதிகளிலும் வரும் காலங்களில் நடைபெறும் என்று மேயர் தெரிவித்துள்ளார்.


