நாங்கள் முன்னீர் பள்ளத்தில் அடுத்த கோயிலாக வீரபாண்டி செல்லாயி அம்மன் கோயிலுக்கு சென்றோம். அங்கே பஞ்சாயத்து தலைவர் உமா வெங்கடேஷ் ஏற்பாட்டின் பேரில் கோயில் சாமியாடியும், ஒன்றிய கவுன்சிலருமான செல்வ சங்கர் அவர்களை சந்தித்தேன்.
செல்வ சங்கர் தொடர்ந்து இந்த பகுதியில் ஒன்றிய கவுன்சிலராக பணியாற்றி வருகிறார். மக்கள் செல்வாக்கு மிக்கவர். இவர் அம்மன் கோயிலை பற்றி பேசும் முன்பு, இந்த ஊரை சேர்ந்த மிகவும் பிரபலமான காவல் துறை அதிகாரி ஒருவரை பற்றி பேச ஆரம்பித்தார்.
எனக்கும் அந்த அதிகாரியை பற்றி தெரியவேண்டும் என ஆசை இருந்தது. அவர் பெயர் நடராஜ். இவர் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் காவல் துறை டி.ஜி.பி போன்ற பதவியை வகித்தவர். அதோடு மட்டுமல் தமிழ்நாடு அரசுத் தேர்வாணயத்தின் முன்னாள் தலைவராகவும் பணியாற்றியவர் (2012-2013).
தன்னுடைய நாற்பது ஆண்டுகாலத்திற்கும் மேலான பொதுச் செவை மூலம் அனை வராலும் அறியப்பட்டவர். இவர் தன் பணி ஓய்வுக்குப்பின் 2011ஆம் ஆண்டு காவல்துறையின் தலைமை இயக்குனராகப் பணியில் சேர்ந்தார். இவர் 1975ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் குழுவைச் சேர்ந்தவர். இவர் பல்வேறு மத்திய மற்றும் மாநிலப் பணிகளில் பல்வேறு நிலைகளில் சேவை புரிந்துள்ளார்.
இவர் மத்திய சேமக் காவல் படையின் ஓர் அங்கமாக மிகவும் சிக்கலான இந்தியப்பகுதிகளான ஜம்பு காஷ்மீர் போன்ற இடங்களில் சேவை புரிந்துள்ளார். 1986 முதல் 1990 வரை காட்மாண்டுவில் இந்திய உயர்மட்டக்குழுவின் முதல் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் எனும் ஊரைச் சேர்ந்தவர் இவர்.இராமச்சந்திரன் நடராஜ் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் 31 மார்ச், 1951 அன்று பிறந்தார். சென்னையில் பூர்ணம் ராமச்சந்திரன் (எழுத்தாளர் உமாச்சந்திரன்), கமலா ராமச்சந்திரன் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து மேல் நிலைப் பள்ளியில் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தார். பள்ளிப் படிப்பின் போது துணை மாணவர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றார். பின்னர் இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்து இயற்பியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். தன் கல்லூரி நாட்களில் தேசிய மாணவர் படையில் தீவிரமாக ஈடுபட்டார். சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து இயற்பியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். மேலும் சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் பொது நிர்வாகம், சட்டம் ஆகிய துறைகளில் முதுகலைப்பட்டம் பெற்றார். பட்டப்படிப்புக்குப்பின் இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகள் எழுதி 1975ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட அலுவலர்கள் குழுவில் அங்கத்தினர் ஆனார்.
நடராஜ் 1975ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார். தன்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு விதமான எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய மாநில அளவிலான பிரச்சினைகளில் தன்னுடைய பாதுகாப்புப்படை நடவடிக்கைகளால் அரசாங்கம் நீடித்துச் செயல்படும் வகையில் திறன் மற்றும் தொடர் முன்னேற்ற அமைப்புகளைச் செயல்படுத்தி வந்தார். 1986 முதல் 1990 வரை நேபாளத்தில் இந்திய தூதரகத்தில் முதல் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் 1994ஆம் ஆண்டு மத்திய சேமக் காவல் படையில் காவல்துறையின் தலைமை இயக்குனராகப் பதவி ஏற்றார். அப்பதவியிலிருந்து அருணாசல பிரதேசம், அசாம், நாகலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபூரா ஆகிய ஏழு சகோதரி மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற இந்திய மாநிலங்களில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனிக் குழுக்கள் அமைத்துத் தன்னேற்புத் திட்டங்கள் தயாரித்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டார்.
2003 நவம்பர் முதல் 2006 ஏப்ரல் வரை சென்னை காவல்துறை ஆணையராகப் பணியாற்றினார். மாநில மனித உரிமை ஆணையம், பொருளாதாரக் குற்றச் செயல் பிரிவு மற்றும் சிறைத்துறை ஆகியவற்றின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராகவும் பணியாற்றினார். பின்னர் பதவி உயர்வின் மூலம் சிறைத்துறையின் தலைமை இயக்குனராகப் பதவி ஏற்றார்.
2009 சூன் 12ஆம் நாள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையின் தலைமை அதிகாரியாகப் பதவி ஏற்றார். 2011 மார்ச்சு 31ஆம் நாள் பணி ஓய்வு பெற்றார்.2012ஆம் ஆண்டு இவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கைதிகள் மறுவாழ்வு மையங்கள், கல்வி, சுகாதாரம், லஞ்ச ஒழிப்பு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இவருடைய ஈடுபாடு, நிர்வாக சீர்திருத் தப்பணிகள், புதுமைத் திட்டங்கள் போன்றவை எல்லோராலும் நன்கு அறியப்பட்டுள்ளன.
நடராஜ் தேர்வுமுறைகளில் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள் மற்றும் ஒளிவுமறைவற்ற வெளிப் படைத்தன்மை ஆகியவை சிறப்பு வாய்ந்தவை, அவற்றுள் ஒரு சில:
1.ஒளிப்படமிகளால் கண்கானிக்கப்படும் தேர்வு அறைகள்
2.கணினி இணைப்பு வழியாக தேர்வுக்குப் பதிவு செய்யும் முறை
3.கணினி இணைப்பு வழியாக மதிப்பெண் பட்டியல் வழங்குதல்
4.கணினி இணைப்பு வழியாக கலந்தாய்வு செய்து நிரந்தர பதிவெண்களை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பதாரர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அருகில் வேற்றுப் பணிக்கனுப்புதல் போன்றவையாகும்.
இவரது காலத்தில் வட இந்தியாவில் போராளிகளால் பாதிப்பு ஏற்படும் என்று அச்சமேற்படுத்தக்கூடிய மிகவும் சிக்கலான பகுதிகளில் இவர் மேற்கொண்ட கண்கானிப்புப் பணிகளை மத்திய சேமக் காவல் படை குழுவினர் கூர்ந்து கவனித்துள்ளனர்.
நடராஜ் தன்னுடைய பணிக்காலத்தில் பின்வரும் பதக்கங்களைப் பெற்றார். 2004 சிறப்புப் படைக்கான வீரப்பதக்கம், 1999 ஜனாதிபதியின் தங்கப் பதக்கம், 1993 காவல்துறையின் சிறப்புத் தகுதி பெறு பணிக்கான ஜனாதிபதியின் பதக்கம் போன்றவை பெற்றுள்ளார்.
2014 முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் நடராஜ் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். இவர் 2016 சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தமிழ்நாட்டின் 15ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.
தற்போது அடையாறு பகுதியில் வசிக்கும் இவர் கல்வி பணியாற்றி வருகிறார். அகாடமி மூலமாக போட்டி தேர்வுக்குமாணவர்களை தயார் செய்து வருகிறார்.
கவுன்சிலர் செல்வ சங்கர் அவர் வரலாற்றை கூறி முடித்து விட்டு, அவ்வூரில் உள்ள வீரபாண்டி செல்லாயி அம்மன் வரலாற்றை நம்மிடம் கூற ஆரம்பித்தார்.
(நதி வற்றாமல் ஓடும்)


