தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் அருகே தங்கியிருந்த நெல்லையை சேர்ந்த இரண்டு வயதுடைய நரிக்குறவ பெண் குழந்தையை நள்ளிரவில் மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்… திருவெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த நரிக்குறவ பெண் அம்சவள்ளியின் பெண் குழந்தை கார்த்திகை வள்ளி கடத்தல்.. தசரா திருவிழாவில் தங்கியிருந்து தொழில் செய்து வந்த நிலையில் நள்ளிரவில் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச்சென்றுள்ளனர். 2 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் குழந்தையை கடத்திச்சென்றதாக தகவல்


