தூத்துக்குடி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற #Wing2point0 நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணிக்கு ‘சிறந்த குழு செயல்பாட்டிற்கான விருது’ கிடைத்திருக்கிறது. “இந்த அணி துவக்கப்பட்ட தினத்தில் இருந்து எங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து எங்களை ஊக்குவிக்கும் மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவனுக்கு நன்றி!” என்று தெரிவித்து திமுக ஐடிவிங் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.


