சாத்தான்குளம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அரசு கல்லூரி மாணவிக்கு அறக்கட்டளை சார்பில் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பனைவிளை கிராமத்தை சேர்ந்த, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பிபிஏ 3ஆம் ஆண்டு மாணவி சந்தியா என்பவரது வீடு தீவிபத்தில் சேதமடைந்தது. இதனையறிந்த முதலூர் அடையல் ராஜரத்தினம் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் பாதிக்கப்பட்ட மாணவியின் கல்லூரி தேர்வு கட்டணம், கல்லூரி சீருடை, காலணிகள் மற்றும் அவரது குடும்பத்துக் கு தேவையான உடைகள், மளிகை பொருள்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
அவர் வழங்கிய பொருள்களை முதலூர் வியாபாரிகள் சங்க பொருளாளர் ரவிச்சந்திரன், கல்லூரியில் மாணவியிடம் வழங்கினார். அப்போது சாத்தான்குளம் அரசு கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜமுனாராணி, மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.


