தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களை நிறுத்த இடம் அளித்த மேயருக்கு ஆட்டோ டிரைவர்கள் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கிழ் கட்டப்பட்டுள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவதற்கு என்று இடம் ஏற்பாடு செய்து நடவடிக்கை மேற்கொண்டதற்காக மேயர் ஜெகன் பெரியசாமியை ஆட்டோ டிரைவர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினர்களுமான சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


