தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மேள தாளம் முழங்க அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுகவின் 52-வது ஆண்டு தொடக்க விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவர்களை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் தூத்துக்குடி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்றனர். அப்போது மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் விமான நிலையத்தில் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ஐ.எஸ். இன்பதுரை, மாவட்ட கழக அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா.சுதாகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஹென்றி, பார்கவுன்சில் உறுப்பினர் வக்கில் பிரபு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் டேக்ராஜா, நடராஜன், வக்கீல் யு.எஸ்.சேகர், பில்லா விக்னேஷ், ஜெ.தனராஜ், கே.ஜே.பிரபாகர், அருண்ஜெபக்குமார், சுதர்சன் ராஜா, மீனவரணி எரோமியாஸ், டார்சன், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, வக்கீல் ரவீந்திரன், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மகளிர்கள் விமான நிலையம் வழிநெடுக வருசையாக நின்று மலர்தூவியும் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.


