செய்துங்கநல்லூரில் மதுபாலா இன்டர் நெட் கடை கடந்த 5 வருடங்களாக இயங்கி வருகிறது. இங்கு அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்களில் பெயர் மாற்றம் உள்பட இன்டர் நெட் சம்பந்தப்பட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தினை முத்தாலங்குறிச்சியை சேர்ந்த ராம விநாயகர் கோயில் அறங்காவலர் சுடலைமணி இயக்கி வருகிறார். இவரது மற்றொரு விற்பனை நிலையமாக மாட்டு தீவனங்களையும், மாட்டுக்கு தேவையான பொருள்களையும் விற்கும் விற்பனை நிலையமாக மதுபாலா மாட்டு தீவனங்கள் விற்பனை நிலையம் திறப்பு விழா நடந்தது. செய்துங்கநல்லூர் திருச்செந்தூர் மெயின்ரோடு பள்ளிவாசல் எதிரில் துவக்கப்பட்டுள்ள இந்த விற்பனை நிலையம் திறப்பு விழாவில் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். முத்தாலங்குறிச்சி சிவன் கோயில் அறங்காவலர் காமராஜ், பெருமாள் கோயில் அறங்காவலர் வள்ளி நாதன், வடக்கு காரசேரி உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


