தூத்துக்குடியில் ஏழைப் பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக அமைச்சர் கீதாஜீவன் தையல் இயந்திரம் வழங்கினார்.
தூத்துக்குடி குட்டி சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த பொன் ராஜேஸ்வரி என்ற பெண்மணி அமைச்சர் கீதாஜீவன் அவர்களிடம், வருகின்ற தீபாவளியை முன்னிட்டும் தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காகவம் தையல் இயந்திரம் தந்து உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை உடனடியாக ஏற்ற அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் நேற்று தூத்துக்குடி கலைஞர் அரங்கில் அந்தப் பெண்மணிக்கு தையல் இயந்திரம் வழங்கினார். இந்நிகழ்வில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.


