கோவில்பட்டி கி.ரா.நினைவு இல்லத்தில் நடந்த இலக்கிய கலை மற்றும் இசை சங்க உறுப்பினர் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில் ராஜ் வரவேற்றார். செரஸ்தார் பொற்செழியன் வரவேற்றார். கூட்டத்தில் கி.ரா. நினைவு இல்லத்தில் கூடுதல் கழிவறை கட்டுதல், நூலகத்துக்கு கூடுதல் புததகம் பெறுவது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தூத்துக்குடி மாவட்ட வரலாறு ஆங்கில நூலை மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில் ராஜ் வெளியிட எழுத்தாளர் சோ. தர்மன் பெற்றுக்கொண்டார். ஏற்கனவே வெளியிட்ட தமிழ் நூலையும் மேடையில் அறிமுக படுத்தினர். நூல் ஆங்கில மொழி பெயர்ப்பாளர் காட்சன் ஓய்லி தாஸ், களப்பணியில் உதவிய மேலஆழ்வார் தோப்பு கிராம உதயம் மேலாளர் வேல்முருகன், புகைப்பட கலைஞர் சுடலைமணிசெல்வன், பதிப்பாசிரியர் அபிஷ்விக்னேஷ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சி தலைவருக்கு மாவட்ட இலக்கியம் கலை மற்றும் இசை சங்க உறுப்பினர்களான சோ.தர்மன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சிகாமராசு ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழச்சியில் , உதவி ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி, மக்கள் தொடர்ப்பு அதிகாரி நவீன் பாண்டியன், மாவட்ட கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட நூலக அதிகாரி சிவசங்கர், கோவில்பட்டி சேர்மன் கஸ்தூரி உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கி.ரா கிலைக்கு த.மா.க. ராஜகோபால் ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சி தலைவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் கீழ நாட்டார்குளத்தினை சேர்ந்த வில்வித்தை சாதனையாளர் சுப்பு லெட்சுமி மாவட்ட ஆட்சியரால் கௌரவிக்கப்பட்டார்.
கலைபண்பாட்டுத்துறை இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


