பணி மாறுதலாகி செல்லும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு செய்தியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக சுமார் 3 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து பணி மாறுதலாகி செல்லும் அவரை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த செய்தியாளர்கள் சந்தித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.


