வ.உ.சிதம்பரம் கல்லுரியின் நிலத்தியல் துறை பேராசிரியர் முனைவர் செல்வம் உலகளாவிய 2% ஆராச்சியாளராக தேர்ந்தெடுக்க பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், மற்றும் எல்சேவியர் பதிப்பகம் அக்டோபர் 4 அன்று வெளியிட்ட ‘உலகின் தலைச் சிறந்த 2% விஞ்ஞானிகள்’ பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, வ. உ. சிதம்பரம் கல்லூரியின் நிலத்தியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர். சே. செல்வம் இடம்பெற்றுள்ளார். உலகளாவிய தரவரிசை பட்டியலில் இந்த வருடம் 84,658 இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 1,23,040 மற்றும் 2021 இல் 1,78,847 தரவரிசை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முனைவர். சே. செல்வம் 36 வயதான இளம் விஞ்ஞானி அவர்களின் ஆய்வு கட்டுரைகள் 2013 முதல் 2022 வரை பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் சுற்றுச்சூழல் அறிவியல், புவி வேதியியல் மற்றும் புவி இயற்பியல் ஆகிய பல்வேறு பிரிவுகளில் செல்வம் வெளியிட்ட 87 ஆய்வுக் கட்டுரைகளை அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், மற்றும் எல்சேவியர் பதிப்பகம் எடுத்துக்கொண்டது. செல்வம் தனது துறையில் உலகளாவிய அளவில் 99,567 இடங்களில் 1,053 இடத்தை பிடித்துள்ளார்.
நிலத்தியல் பிரிவில் தமிழ்நாட்டில் இருவர் இடம்பெற்றுள்ளார்கள் அதில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எல்சேவியர் அனைத்து துறைகளிலிருந்தும் மொத்தம் 210,198 விஞ்ஞானிகளைத் தேர்ந்துஎடுத்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகளில் 4,635 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்தப் பட்டியல் ஆராய்ச்சியாளர்களை 22 அறிவியல் துறைகள் மற்றும் 174 துணைத் துறைகளாக வகைப்படுத்தியது. 11 தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களில் 89 ஆராய்ச்சியாளர்களும், மாநிலத்தில் உள்ள 17 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இருந்து 143 பேரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி)யைச் சேர்ந்த சுமார் 50 விஞ்ஞானிகள், எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் இருந்து 26 பேர், சாஸ்த்ரா என குறிப்பிடப்படும் சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாடமியில் இருந்து 11 பேர், காந்திகிராம கிராமப்புற பல்கலைக்கழகத்தில் இருந்து 8 பேர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
காருண்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸில் இருந்து 6 பேர், பரத் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் மற்றும் சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸில் இருந்து தலா 5 பேர், கற்பகம், செட்டிநாடு அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் அகாடமியில் இருந்து 4 பேர் மற்றும் கல்வி (CARE), மற்றும் BS அப்துல் ரஹ்மான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து 2 பேர் இடம்பெற்றுள்ளனர்.
மாநிலப் பல்கலைக்கழகங்களில், கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் 20 விஞ்ஞானிகளையும், பாரதியார் பல்கலைக்கழகம் 18 பேரையும், அழகப்பா பல்கலைக்கழகம் 11 பேரையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 10 பேரையும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 4 பேரையும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.


