தூத்துக்குடியில் நடந்த மேசை பந்து போட்டியில் புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான மேசை பந்து போட்டி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 17 வயதிற்குட்பட்ட ஒற்றையர் singles) பிரிவில் நிசாந்த் ஜெனிபர் முதலிடமும் இரட்டையர் (Doubles) பிரிவில் நிசாந்த் ஜெனிபர் மற்றும் பிரேம் குமார் முதலிடமும் பெற்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர் லூர்துசாமி ஊக்கமளித்த உடற்கல்வி இயக்குனர் யோகன் அ காற்றார் ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் அமல்ராஜ், தாளாளர் அகஸ்டின் ஆகியோர் பாராட்டினர்.


