கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.7ஆயிரம் வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட எச்.எம் எஸ் உழைப்பாளர் சங்க தலைவர் டாக்டர் ராஜலக்ஷ்மி, மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “கட்டுமானம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசாக ரூபாய் 7000 வழங்க வேண்டும், வீடு கட்ட அளித்திடும் 4 லட்சம் மானியத்தை பெற எளிய நடைமுறையை உருவாக்க வேண்டும், 18 நல வாரியங்களிலும் ஒரே மாதிரியான இனைய தல சேவையை நடைமுறை பின்பற்ற வேண்டும்.
நலவாரிய உறுப்பினர் பதிவை புதுப்பிக்கும் போது பென்சனுக்கு விண்ணப்பிக்கும் போதும் தொழிற்சங்க பரிந்துரை அவசியம் என விதிமுறை உருவாக்க வேண்டும். 18 அமைப்புசாரா நல வாரியங்களுக்கு கட்டுமான வாரியத்தை போல நிரந்தர நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டும். நல வாரியங்களில் வழங்கப்படும் உதவித்தொகையை காலத்துக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும். நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களின் அரசு பணியை காரணம் காட்டி உரிமைகளை நிராகரிப்பதை கைவிட வேண்டும்.
உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர்கள் தனி நபர் அட்டை வழங்கி கட்டுமான அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு பெற விஏஓ ஆர் ஐ ஒப்புதல் தடை செய்ய வேண்டும், ஆயுள் சான்று சமர்ப்பிப்பதில் உள்ள இடையர்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாவட்ட துணைச் செயலாளர் சாதிக் பாச்சா மரிய திவ்யா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் சந்திரமணி, விஜய், மாலதி, குருவம்மாள், கோமதி, சமாதான மேரி ஆகியோர் உடன் இருந்தனர்.


