குளத்தூரில் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம், குளத்தூரில் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற பள்ளி நூற்றாண்டு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, பள்ளி தலைமை ஆசிரியை மரியராஜ செல்வி, வட்டார கல்வி அலுவலர் சரளா, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி, வேம்பார் தெற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி ராஜகோபால், ஒன்றிய குழு உறுப்பினர்கள் செந்தூர்பாண்டியன், ராஜேந்திரன் கிளைச் செயலாளர் பேச்சிமுத்து, முருகேசன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி, வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பால்பாண்டி, உட்பட ஆசிரிய – ஆசிரியைகள் பழைய மாணவ – மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


