தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத்திறன் போட்டிகளில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகளில் மாநிலம் முழுவதுமிருந்து 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவியா் பங்கேற்றனா். இதில், மதுரை அமெரிக்கன் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி அணி 2ஆம் இடம் பெற்றனது.
வெற்றி பெற்றோருக்கு தமிழ்நாடு வணிகா் சங்க தூத்துக்குடி மத்திய மாவட்டத் தலைவா் பழரசம் விநாயகமூா்த்தி பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா். வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் கருப்பசாமி வரவேற்றாா். ஏற்பாடுகளை பிபிஏ துறை மாணவா் அமைப்புத் தலைவா் குமரன், செயலா் ஷிவானி, மாணவா்கள் செய்திருந்தனா்.


