தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி கொடி ஊர்சுற்றி கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக யாகசாலை பூஜையுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் தீபாராதனை நடைபெற்றது. அனைத்து தரப்பு மக்களும் எல்லா செல்வங்களையும் வளங்களையும் தொழில்கள் சிறப்பாக நடைபெறவும் மழைவளம் பொழிந்து விவசாயம் செழித்து நோயற்ற வாழ்வு அனைவரும் வாழ சிறப்பு பூஜைகள் நடந்தது.
சிறப்பு நிகழ்ச்சியாக பத்திரகாளியம்மன் கோவில் இந்து சமயவகுப்பு மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பரதநாட்டியம், நடைபெற்றது. கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் கோவில் துணைச்செயலாளர் பொன் ஆனந்த் சரஸ்வதி ஹாட்பாக்ஸ் பரிசு பொருட்களை வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், தசரா திருவிழா கமிட்டியாளர்கள், மாதர் சங்கத்தினர், இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.


