புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு வனத்திருப்பதி கோவிலில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் உள்ள புன்னைநகர் புன்னை ஸ்ரீ நிவாச பெருமாள், ஆதிநாராயணர், சிவனணைந்த பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத 4வது சனிக்கிழமையன்று காலை 4:00 மணிக்கு நடை திறப்பு,காலை 6 மணிக்கு மூலவர் உத்ஸவர் திருமஞ்சனம், மூலவர் புஷ்ப அலங்காரம், காலை 8:00 மணிக்கு ஸ்ரீவில்லிப் புத்துார் ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவித்த மாலையை, ஸ்ரீநிவாச பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது.
காலை 8:30 மணிக்கு திருவாராத னம், தளிகை சாத்து முறை கோஷ்டி, மாலை 6:30 மணிக்கு பெருமாள் திருவீதி உலா, கருட சேவை யும், தொடர்ந்து வாண வேடிக்கையும் நடந் தது. காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் ராஜகோபாலின் புதல்வர் சரவணன் ஆலோசனையின் பேரில் கோயில் மேலாளர் வசந்தன் செய்திருந்தார்.


