நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம், நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளை நடத்தியது.போட்டிகள் 5 பிரிவுகளில் நடைபெற்றது. ஒன்பது வயது, பதினொரு வயது, பதிமூன்று வயது, பதிணைந்து வயது மற்றும் இருபத்தியோரு வயதுக்குட்பட்ட பிரிவில் மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.
நாசரேத் சேகர குரு. ஹென்றி ஜீவானந்தம் ஆரம்ப ஜெபம் செய்தார். போட்டி அமைப்புக் குழு லேவி ஆசோக் சுந்தரராஜ் வரவேற்றார். மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுதாகர் புறாக்களை பறக்கவிட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த 300-க்கு மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. 90 வெற்றிக்கோப்பைகளும் 90 பதக்கங்களும் வழங்கப்பட்டன.
மொத்தப் பரிசாக பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. தியாகி டி.கே.செல்லத்துரை நினைவாக ஒய்.எம்.சி.ஏ. நாசரேத் வெற்றிக்கோப்பை கள் வழங்கப்பட்டன. அதிக மாணவர்களை பங்களிக்கச் செய்த பள்ளிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆம்ஸ்ட்ராங், ஜெயகுமார், சாம்சன்,அரிமா புஷ்பராஜ் மற்றும் ஒய்.எம்.சி.ஏ உறுப்பினர்கள் போட்டிகளை ஒருங்கினைத்து நடத்தினர்.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், ஆசிரியர்கள் சுஜித் செல்வசுந்தர் மற்றும் தனபால் ஆகியோர் சதுரங்க போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இயற்பியல் ஆசிரியர் ஹெர்சோம் ஜெபராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பரிசளிப்பு விழாவில் ஒய்.எம்.சி.ஏ தலைவர் எபனேசர் வரவேற்றார். பள்ளி தாளாளர் சுதாகர், பரிசுகளை வழங்கினார். ஒய்.எம்.சி.ஏ செயலர் சாமுவேல் ராஜ் நன்றி கூறினார். நாசரேத் சேகர குரு ஹென்றி ஜீவானந்தம் ஆசி கூறினார்.


