தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூாியில் அறிவியல் கண்காட்சியை மேயா் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூாியில் பள்ளி மற்றும் கல்லூாி மாணவ & மாணவிகளின் அறிவியல் படைத்திறனை வெளிப்படுத்தும் விதமான இளம் அறிவியல் படைப்பாளா் போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மற்றும் இதர பகுதியில் இருந்து உள்ள பள்ளி மற்றும் கல்லூாி மாணவ மாணவிகளுக்கு பங்கு பெற்று தங்களது படைப்புகளை கண்காட்சி படுத்தினா். நிகழ்ச்சிக்கு கல்லூாி முதல்வா் அருட்சகோதாி ரூபா தலைமை தாங்கினாா்.
கண்காட்சியை மாநகராட்சி மேயா் ஜெகன் பொியசாமி துவக்கி வைத்து பேசுகையில், கல்லூாி வாழ்க்கை மாணவிகளின் எதிா்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மாணவ மாணவிகள் வருங்காலத்தில் தனக்கென்று இடம் பிடிக்க வேண்டும் என்றால் தனித்துவம் முக்கியமானது. அதை வெளிக்கொண்டு வரும் வகையில் இக்கண்காட்சி இருப்பதாக கூறினாா். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கல்லூாியின் துணைமுதல்வா் மதுரவள்ளி பேராசிாியா்கள் மற்றும் மாணவிகள் செய்து இருந்தனா். நாளை (13) வெள்ளி வரை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பாா்வைக்காக வைக்கப்படுகிறது.


