தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மெகா அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடைபெற்றன.
தூத்துக்குடி வாகைக்குளம் புனித மாதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்காக மெகா அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஐஸ்பர் ஞானச்சந்திரன் மற்றும் இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் தலைமை தாங்கினார்கள். சிறப்பு விருந்தினராக ஸ்காட் கல்வி குழும இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான்கென்னடி வந்து சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், பள்ளி பருவத்திலேயே உங்களது விஞ்ஞான திறனை வளர்த்துக்கொளவதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
உங்கள் ஆசிரியர்கள் சொல்லித்தருவதன் மூலம் உங்களது அறிவு திறனை நிரூபிக்க முடியும். உங்களை போன்ற மாணவர்கள் விஞ்ஞானிகளாக மாறியிருக்கிறார்கள். உங்களது கண்டுபிடிப்பு படைப்புகள் கண்காட்சியில் வைப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எதிர்காலத்தில் நீங்கள் அனைவரும் சிறந்து விளங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து, இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் சிறப்பு உரையாற்றினார்,
பொறியியல் கல்லூரி வளாகத்தில் பள்ளி மாணவர்கள் திறனை ஊக்குவிப்பதற்காக புதிய கண்டுபிடிப்புகள், திட்ட மாதிரிகள் மற்றும் மெகா அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் தங்களது வியத்தகு கண்டுபிடிப்புகளையும், திட்டங்களையும் காட்சிபடுத்தினர். அவற்றின் செயல்பாடுகளை பற்றி பார்வையாளர்களிடம் மாணவர்கள் விளக்கி கூறினர். இந்த கண்காட்சியில் இடம் பெற்ற பள்ளி மாணவர்களின் சிறந்த படைப்புகள், கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட படைப்புகள் 350க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், இயக்குநர் (மாணவர் சேர்க்கை) ஜான்கென்னடி, கல்லூரி முதல்வர் ஐஸ்பர் ஞானச்சந்திரன், இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன், மற்றும் துறை பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் அந்தோணி லிவிங்ஸ்டன் செய்திருந்தார். இந்நிகழ்ச்சிக்கான அணைத்து ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் விக்னேஷ் செய்திருந்தார்.


