தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்களில் 24 பணியிடங்கள் ‘Out Sourcing” மூலம் நிரப்பப்பட உள்ளது.
இது தாெடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் இரவுக்காவலர/ மசால்ஜி/ தோட்டக்காரர்/ துப்புரவாளர்/ஸ்கேவன்ஜர் நிலையில் மொத்தம் காலியாகவுள்ள இரவுக் காவலர் – 11, மசால்ஜி-10, தோட்டக்காரர் 1, துப்புரவாளர் 1, ஸ்கேவன்ஜர் 1 என மொத்தம் 24 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் ‘Out Sourcing” மூலம் நிரப்பிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவரப்படி காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களை ‘ ழுரவ ளழரசஉiபெ” மூலம் அளித்திட அரசு விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட / அரசின் அங்கீகாரம் பெற்ற தகுதிவாய்ந்த முகமையானது (Agency) முத்திரையிடப்பட்ட கவரில் உரிய விண்ணப்பதினை முகமை அங்கீகார நகல், ஊதிய ஒப்பந்த புள்ளி விபரங்களுடன் 27.10.2023-க்கு முன்பாக “மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தூத்துக்குடி.” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கவரின் மேல்புறம் ‘மசால்ஜி / இரவுக்காவலர் Out sourcing விண்ணப்பம்” என குறிப்பிடப்பட வேண்டும். 27.10.2023-க்கு பின்னர் வரப்பெறும் எவ்வித விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.


