கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் Samp சார்பில் கட்டுரை போட்டியானது ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.
பண்டைய தமிழ்ச்சமுகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த போட்டியை தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் அனைவரையும் வரவேற்றார். பள்ளியின் முதுகலை வரலாற்று ஆசிரியர் முத்தையா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வரலாற்று ஆசிரியர் மாணிக்கம், முதுகலை ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியன், அழகு செல்வம் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் 52’மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முதல் பரிசு ரூபாய் 50000/- இரண்டாம் பரிசு ரூபாய் 25,000/- மூன்றாம் பரிசு 10,000/- என்பது குறிப்பிடதக்கது.


