தூத்துக்குடியில் 36 அணிகள் பங்கேற்கும் பல்கலைக்கழக சாம்பியன் கோப்பை கல்லூரி மாணவிகள் கபடி போட்டி தொடங்கியது.
தூத்துக்குடியில் தூய மரியன்னை கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிக்கு இடையிலான கல்லூரி மாணவிகள் பங்குபெறும் கபடி போட்டிகள் துவங்கியது. துவக்க விழாவில் கல்லூாி முதல்வா் அருட்சகோதாி ஜெஸி பொ்ணான்டோ தலைமை வகித்தார். கல்லூாி செயலா் அருட்சகோதாி ஷிபானா முன்னிலை வகித்தார். டாக்டா் தினகரன், கல்லூாி சுயநிதிப்பிாிவு இயக்குனா் அருட்சகோதாி ஜோஸ்பின் ஜெயரானி, கல்லூாி துணை முதல்வா் குழந்தை திரேஸ், கல்லூாி உடற்கல்வி இயக்குனா் கிறிஸ்டி உட்பட பலா் கலந்து கொண்டனா்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மகளிர் கபடி போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 36 கல்லூரி மாணவிகள் அணிகள் பங்கேற்கின்றனர். இந்த மகளிர் கபடி போட்டி நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் இறுதிப் போட்டிகள் நாளை நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு வெற்றிக் கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. மேலும் இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பல்


