கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடந்தது.
தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள, கருங்குளம் வெங்கடாஜலபதி கோயிலில், புரட்டாசி 3வது சனிக்கிழமை கருடசேவை நடந்தது. இதனை முன்னிட்டு, காலை 6 மணிக்கு விஸ்வரூபம் 6:30 மணிக்கு திருமஞ்சனமும். 7:29 மணிக்கு உற்சவர் சீனிவாச பெருமாள், தெற்கு கோயிலுக்கு எழுந்தருளினார், 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், தொடர்ந்து அலங்கார, தீபாராதனை, மதியம் 1:00 மணிக்கு அன்ன தானம் நடந்தது.
மாலை 6 மணிக்கு சாயரட்சை, 7:00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி அலங்காரம் செய்து மாலைகள் சாற்றப்பட்டு 10:30 மணிக்கு கருட வாகனத்தில் மலையில் சுற்றி வந்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் ராஜேஷ், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர்நம்பி, கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


