இன்றைய தினத்தந்தியில் என்னுடைய தூத்துக்குடி மாவட்ட வரலாறு நூலின் விமர்சனம் வெளிவந்துள்ளது. வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கு நன்றி. அவர்கள் எழுதிய விமர்சனத்தினை படித்து நூலை வாங்குங்கள் நண்பர்களே – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
தூத்துக்குடி மாவட்ட வரலாறு
தூத்துக்குடி மாவட்டத்தின் தகவல் களஞ்சியம் போல இந்த நூல் அமைந்து இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து விதமான சிறப்புகளும் தனித்தனி தலைப்புகளில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த மாவட்டத்தின் தொல்லியல் சிறப்புகள் அங்கு நடைபெற்ற ஆய்வுகள் இந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்ட விமான நிலையம் ரயில் பாதை சரணாலயங்கள் அணைகள் தொழிற்சாலைகள் ஆகியவையும் இந்த மாவட்டத்தின் கலை சிறப்பு விருது பெற்ற எழுத்தாளர்கள், தமிழுக்கு தொண்டாற்றியவர்கள் பற்றிய விவரம் உள்ளிட்ட அனைத்தும் விவரிக்கப்பட்டு இருக்கின்றன குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல், பாலை ஆகிய ஐந்து விதமான நில அமைப்பு இந்த மாவட்டத்தில் காணப்படும் சிறப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு, வெளியீடு பொன் சொர்ணா, விலை 250, செல்போன் – 8760970002


