தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் பள்ளி மாணவ – மாணவியருக்கு இடையிலான கவிதைகள் மற்றும் திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
போட்டிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து உரையாற்றினார். விழாவில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில துணை அமைப்பாளர் தில்லை செல்வம், மாநகர செயலாளர் ஆனந்த் சேகரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் சரத்பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


