தூத்துக்குடி மாவட்டத்தில் 2,39,582 மகளிர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினர். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய தேதி வரை 2,39,582 மகளிர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.


