செய்துங்கநல்லூரில் சாலை அகலபடுத்தப்பட்ட பிறகு அதிகமான விபத்து ஏற்படுகிறது. இதனால் செய்துங்கநல்லூர் மெயின்ரோட்டில் நுழைவு வாயிலில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வியாபாரிகள் சங்க தலைவர் ஐயப்பன் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளரிடம் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் கிராமம் ஆகும். தற்போது இந்த ஊருக்குள் திருச்செந்தூர் சாலை விரிவு படுத்தும் பணி நடந்து வருகிறது. சாக்கடை வாறுகால் அமைக்கும் பணி, நடந்து செல்லும் பாத சாரிக்களுக்ககா பேவர் பிளாக் கல் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி மிக மெதுவாக நடந்து வருவதால் விபத்து ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சந்தை அருகில் நடக்கும் பணி மந்தமாக நடைபெறுவதால், புதன் கிழமை தோறும் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ளது. எனவே இந்த பணிகளை துரித படுத்தி முடித்துதரவேண்டும். செய்துங்கநல்லூரில் இருபுறமும் பஸ் நிலையம் அமைக்கும் பணி, பொது கழிப்பிட வசதி போன்ற பணிகள் நடைபெறும் என வேலை துவங்கும் போது அறிவித்தார்கள். ஆனால் தற்போது அந்த பணிகள் நடைபெறுவதற்காக சாத்தியக்கூறுகளே இல்லை. எனவே உடனடியாக பஸ்நிலையம் மற்றும் பொது கழிப்பிட வசதிக்கான பணிகளை முடித்து தரவேண்டும். பாதை விரிவு படுத்தப்பட்ட காரணத்தினால் வாகனங்கள் மிக வேகமாக வருகிறது. இதனால் ஊருக்குள் வரும் போது விபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் ஊருக்குள் சாலை துவங்கும் இருபுறமும், தனியார் ஆஸ்பத்திரி மற்றும் முக்கியமான இடங்களில் மக்கள் கடக்கும் இடத்தில் வேகத்தடை அமைத்து தரவேண்டும். ஊருக்குள் வேகங்களை குறைத்து வாகனத்தினை ஓட்ட வாகன ஓட்டிகளுக்கு அறிவுருத்தும் விளம்பர பலகை வைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர் ஆவண செய்வதாக வாக்களித்தார். அவருடன் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் வேம்புதுரை, தவ்கீத் ஜமாத் துணைதலைவர் அப்துல் கனி உள்பட பலர் சென்றனர்.


