தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஊராகும். இந்த ஊரில் நவத்திருப்பதி ஸ்தலங்களில் முதல் ஸ்தலமான கள்ளபிரான் கோவில், நவகைலாயங்களில் 5வது ஸ்தலமாக கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இது தவிர மும்மதத்தைச் சேர்ந்த ஸ்தலங்களும் அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஊருக்குளம் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஊருக்குள் முறையாக வருவதில்லை. தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் புதுக்குடியில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு பல பேருந்துகள் சென்றுவிடுகிறது. பேருந்துகளை அனைத்தும் ஊருக்குள் வந்து செல்லவேண்டும் என்று இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வியாபாரிகள் சங்கத்தினர் என அனைவரும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பேருந்துகள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வரவேண்டும் என்று வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சர்வதேச உரிமைக்காக மாவட்ட துணை தலைவி பிரிசில்லா மற்றும் ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கத்தலைவர் காளியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த கூட்டத்தில் வியாபாரிகள் மற்றும் ஊர்பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அனைத்து பேருந்துகளும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்கள் வரவேண்டும் என்று வருகிற செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் அவர்களை சந்தித்து முறைப்படி கோரிக்கைகள் குறித்து மனு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தவறும் பட்சடத்தில் சர்வதேச உரிமை கழகமும் வியாபாரிகள் சங்கமும் இணைந்து மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் சர்வதேச உரிமை கழக மாவட்ட துணை தலைவர் சந்துரு, சர்வதேச உரிமை கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இசக்கி ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் பாலா, மருதம் பவுண்டேஷன் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


