சமூக ஆர்வலர் சுகன் கிறிஸ்டோபர் என்பவர் தகவல் அறியும் சட்டம் மூலம் சில தகவல்கள் கேட்டிருந்தார். அதற்கான தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சாரதா கல்லூரி பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த 2013 முதல் 05.-09.-2023 வரை 10 ஆண்டு வரை 35 விபத்துக்கள் நடந்துள்ளது. இந்த விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒரு கல்லூரி மாணவி உட்பட 33 பேர் காயம் அடைந்துள்ளனர். பள்ளி, கல்லூரி தொடங்கும், முடியும் வேலையில் காவலர்களை பணியமர்த்தல் வேண்டும்.


