தமிழ்நாடு அரசு தோட்டக் கலைத்துறை சார்பில் பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் மூக்குப்பேறி ஊராட்சியில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியை ஊராட்சிமன்ற தலைவர் கமலாகலைஅரசு துவக்கி வைத்தார். ஊராட்சி துணைத்த லைவர் தனசிங், அரசு தோட்டக்கலை உதவி இயக்குனர் முகமது ஆசிப், ஊராட்சி உறுப்பினர்கள் பாலசுந்தர், கலை அரசு, எம்.எஸ்.பி. வரி ஆலோசகர் பிரேம், தோட்டக்கலை அலுவலர்கள் இராம சுப்பையா,சுதாகர், யுவராஜ், தி.மு.க. பிரமுகர் கோயில் ராஜ், கணேசன், சித்திரை செல்வி, விஜயா, மேரி, மாட சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் ஸ்டெல்லா செய்திருந்தார்.


