சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தல ஆண்டு திருவிழாவில் சப்பரபவனி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலத்தின் 225ஆவது ஆண்டு திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தினமும் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசிா் உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.கடந்த 23ஆம்தேதி காலை 5.30மணிக்கு திருப்பலியும், திருப்பயணம், இரவு 7.30மணிக்கு ஜெபமாலை, திருவிழா மாலை ஆராதனை மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது.
10ஆம் நாளான நேற்று காலை 5.30மணிக்கு 225ஆம் ஆண்டு பெருவிழா கூட்டுத்திருப்பலி, திருப்பயணம், மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீா் செல்வம்,ஆயா் செயலா் மைக்கிள் சேசு ரினோ முன்னிலையில் நடைபெற்றது. இரவு 7மணிக்கு திருப்பலியும், அதிசய மணல்மாதா சப்பரபவனியும் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா விழா ஏற்பாடுகளை முதன்மை திருத்தல அதிபா் ஜாண்சன் ராஜ் தலைமையில் திருத்தல நிதிக்குழு, அருள்சகோதரிகள், இறை மக்கள செய்து வருகின்றனா்.


