1.தாமிரபரணி தண்ணீர் குடித்து!
தனிமூலிகைச் சாரில் குளித்து!
தலைமுறைக்கும் நோய் தீர்த்து!
தன்னிகர் இல்லாத ஜீவநதியே!
2.பொதிகை மலையில் தோன்றி!
புன்னக்காயல் கடலில் கலந்து!
புது உணர்ச்சி கொடுப்பவளே!
புதிய மலர்ச்சி தருபவளே!
3.வாழவைக்கும் இரு மாவட்டம்!
வளர்ச்சி காண திருநெல்வேலி!
வந்து செழிக்கும் தூத்துக்குடி!
வாழும் மக்கள் போற்றுதே!
4.வரும் ஆற்றின் நீளம்-128கி.மீ!
வந்துநீர் தேக்க -8அணைக்கட்டு!
வழியே நீர்செல்ல -11கால்வாய்!
வயல் பாசனம் -86,107 ஏக்கர்!
5.திருநெல்வேலி -40,000 ஏக்கர்!
தூத்துக்குடி -46,107 ஏக்கர்!
தொன்மை காலம் தொட்டே!
தொடர்ந்து விவசாயம் நடக்குதே!
6.திருநெல்வேலி -6 அணைகள்!
தண்ணீர்செல்ல -7 கால்வாய்!
தண்ணீர்நிரம்ப -133 குளங்கள்!
தந்தால் விவசாயம் நடக்குதே!
7.தூத்துக்குடி -2 அணைக்கட்டு!
தண்ணீர்செல்ல -4 கால்வாய்!
தண்ணீர்நிரம்ப -53 குளங்கள்!
தவித்து விவசாயம் நடக்குதே!
8.குடிநீர் தரும் தெய்வஆறு!
கூட்டுக் குடிநீர் திட்டத்திலே!
திலி -தூடி -விருதுநகருமே!
தாகம் தணிக்கும் மாவட்டமே!
9.தொழில் வளம் கொழிக்கவே!
தொழிற் சாலைக்கு தண்ணீரே!
அந்நிய குளிர்பான கம்பெனி!
அதற்கு தண்ணீர் கொடுக்குதே!
10.சாகாது -குடி நீருக்குமே!
சாகுபடி -உயிர் உழவுக்குமே!
சாகும்படி செய்யாது -மீதமே!
சார்ந்த தொழில் கொடுப்பீரே!
**************
11.அணை நிரம்பிய எழுச்சி!
அனைத்து மக்கள் மகிழ்ச்சி!
அதை பிரிப்பதில் வீழ்ச்சி!
அதனால் இப்போது வறட்சி!
12.அனைத்து சாக்கடை பாய்ந்து!
ஆலைக் கழிவுகள் கலந்து!
அரசே மண்ணை எடுத்து!
அனைத்து வளமும் இழந்து!
13.அழியும் ஆற்றைக் காப்பது!
அரசின் கடமை அன்றோ?
அதற்கான விழிப்பு உணர்வே!
ஆர்ப்பாட்ட அறிவிப்பு இங்கே!
14.ஆறுகள் தினம் இன்று!
அகிம்சை வழியிலே வென்று!
அனைவரின் நினைப்பும் ஒன்று!
அதை உணர்ந்தால் நன்று!
15.ஆற்று நீரைப் பருகும்!
அனைத்து உறவும் எழுகவே!
ஆழ்வார் திருநகரி வருகவே!
அகிம்சை வழியில் வெல்லவே!


