களக்காட்டில் அகில இந்திய காமராஜர் பேரவை சார்பில் டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .அகில இந்திய காமராஜர் பேரவை தலைவர் S.P.துரை நாடார் தலைமை தாங்கினார் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் A.K.நெல்சன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்குனேரி தொகுதி செயலாளர் ஈழவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் சிவாஜி ராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட தலைவர் முகமது காஸிர், களக்காடு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலாஜி, நகர செயலாளர் முருகன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி களக்காடு ஒன்றிய செயலாளர் ஆனந்தசுந்தர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செல்வராஜ்,சேகர்,விக்டர், சண்முகம்,சுடர்மணி பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


