முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் அங்கமங்கலம் ஊராட்சியில் நடத்தப்பட்ட மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாமில் பயனாளிகளுக்கு தாது உப்பு கலவைகளை மாண்புமிகு மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று 22.9.23 வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்கள்,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா அவர்கள்,மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.அ.பிரம்மசக்தி அவர்கள்,ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திரு.ச.ஜனகர் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.


