உமரிக்காடு ஊராட்சி பகுதி மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவரின் சொந்த நிதியில், லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், உமரிக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடும் குடிநீர் ஏற்பட்டுள்ள நிலையில், உமரிக்காடு மற்றும் ஆலடியூர் பகுதி பொது மக்களுக்கு, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்குமார் தனது சொந்த நிதியில் லாரி மூலம் குடிநீர் வழங்கினார். இந்நிகழ்வில் உமரிக்காடு ஊர் தலைவர் கார்த்திசன், ஆலடியூர் ஊர் தலைவர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் சேகர், மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சொந்த நிதியில் வீடு வீடாக குடிநீர் வழங்கியதை அப்பகுதி மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.


